ரமழான் மாதத்தில் உலகை உலுக்கிய 5 வரலாற்று நிகழ்வுகள்
1. பத்ர் போர்:
இன்று நாம் முஸ்லிம்களாக வாழ்வதற்கு அன்று அம்முந்நூறு சஹாபாக்கள் தங்களின் உயிரையும் அல்லாஹ் உடைய பாதையில் தியாகம் செய்வதற்கு முன்வந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட எதிரிகளை வீழ்த்தி இஸ்லாம் என்றும் நிலைத்திருக்க வித்திட்ட அப்போரும் இப்புனிதமிகு ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு ரமலான் மாதம் பிறை 17 இல்தான்.
2. மக்கா வெற்றி:
குறைசிகளின் வசமிருந்த முஸ்லிம்களின் முதல் வணக்கஸ்தலமாகிய மஸ்ஜிதுல் ஹரம் ஷரீபை நமது முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் மீட்கபட்டு அங்குள்ள சிலைகளை தகர்த்தெரிந்து உலக வரலாற்றின் திருப்புமுனையாக அமைந்த இம்மாபெரும் நிகழ்வு நடந்தும் ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில்தான்.
3. அன்-ஜாலித் போர்:
உலகத்தையே ஆளவேண்டும் என்ற வெறிகொண்ட எண்ணத்தோடு அப்பாஸிய கிலாபத்தையே அடித்து நொறுக்கிய மங்கோலிய படைகளை தடுத்து நிறுத்தி, அவர்களின் வெறித்தனத்தை அடக்கவேண்டும் என்று எகிப்து மம்லுக் சுல்தான் தலைமையில் அவர்களுக்கு எதிராக போர் செய்து முஸ்லிம்கள் வெற்றிகண்டதும் ஹிஜ்ரி 658 ரமலான் மாதத்தில்தான்.
4. ஹைதீன் போர்:
உலக யூத, கிறிஸ்தவர்கள் எல்லாம் திரும்பி பார்க்கவைத்த, நடுங்கவைத்த சுல்தான் சலாஹுதீன் அய்யுபி தனது பெரும் படையுடன் ஜெருசலம் நகரை (பைதுல் முகத்தஸ்) கைப்பற்ற கிறிஸ்தவர்களுக் கு எதிராக படையெடுத்து வெற்றிபெற்றதும் இப்புனிதமிகு ரமலான் (ஹிஜ்ரி 583) மாதத்தில்தான்.
இவ்வெற்றிக்கு பிறகு நமது முதல் கிப்லா இஸ்லாமியகளின் கையில் 700 ஆண்டுகள் இருந்தது குறிப்பிடத்தக்க து. மீண்டும் ஒரு சலாஹுதீன் அய்யுபியை போன்ற ஒரு மாவீரனை இவ்வுலகிற்கு அல்லாஹ் தந்தருள்வானாக ஆமீன்ஸ
5. குவாடிலட் போர்:
ஸ்பெயினின் கொடுமையான ஆட்சி புரிந்த விசிகோத் மன்னனுக்கு எதிராக மொரோக்கோவில் அடிமை வம்சத்தில் பிறந்த பெர்பர் இனத்தை சேர்ந்த தாரிக் பின் ஜியாத் தலைமையில் ஸ்பெயின் மீது மிகவும் குறைந்த வீரர்களை கொண்டு பெரும்படையை வெற்றி கண்டு ஐரோப்பிய கண்டமே நடுங்கிய வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நடந்தது ஹிஜ்ரி 92ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில்தான். இவ்வெற்றிக்கு பிறகு சுமார் 800 ஆண்டுகள் ஸ்பெயினை (அண்டலூசியவை)முஸ்லிம்கள் ஆட்சிபுரிந்தார்கள்
LIKE US>> CLICK HERE>>
https://www.facebook.com/acmycweb1
Latest Jumuahs
Ash Sheikh Murshid Mulaffar(Humaidi)
Colombo 12, Aluthkade, Muhiyadeen Jumua Masjidh
Ash Sheikh Fayas(Furqani Kekirawa)
Kurunegala, Mallawapitiya Jumua Masjidh
Ash Sheikh Mukshith Ahamed (Al Fasi)
Colombo 04, Majma Ul Khairah Jumua Masjith (Nimal Road)
Ash Sheikh Irfan Mubeen(Rahmani)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
Ash Sheikh Siyam Ashar(Hashimi)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
Ash Sheikh M.I.M Rizwe Mufthi(Binnoori)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
Ash Sheikh Siyam(Rahmani)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
Ash Sheikh Yoosuf Mufthi(Binnoori)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
Ash Sheikh Ashiq Abul Hasan(Rashadi)
Malwana, Raxapana Jumua Masjidh
Ash Sheikh Hassan Fareed(Binnoori)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
Latest Special Bayans
Ash Sheikh Nibras(Haqqani)
Colombo 09, Dematagoda Place, Ganeemathul Qasimiya Jumua Masjidh
Ash Sheikh Hithayathullah Razeen(Rahmani)
Colombo 12, Aluthkade, Muhiyadeen Jumua Masjidh
Ash Sheikh Nibras(Haqqani)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
Ash Sheikh Nibras(Haqqani)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
Ash Sheikh Hithayathullah Razeen(Rahmani)
Kurunegala, Mallawapitiya, Masjidhul Hasanath
Your Comments