எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையை முன்மாதிரியாக்கி, ஏற்றமிகு ஸஹாபாக்களை இதயத்தில் ஏந்தி, தூய்மையாக வாழ வேண்டிய பாசமிகு பாவையர் உள்ளங்களில் இன்று கூத்தாடிகளும், விபச்சாரிகளும் குடி கொண்டிருக்கின்றனர்.
ஐவேளை அல்லாஹ்வை வணங்கி, அணுதினமும் திக்ரு சொல்ல வேண்டிய நாவுகள் இன்று ஆபாசங்களை பேசிக் கொண்டு அலைகின்றன. அன்னிய ஆண்களுடன்/பெண்களுடன் அல்ல, நிச்சயித்து வைத்திருக்கும் ஆண்களுடன்/பெண்களுடன் கூட தனிமையிலோ, போனிலோ பேசக் கூடாது என்று டாக்டர் யூசுஃப் அல் கர்ளாவி போன்ற உலகறிந்த மார்க்க அறிஞர்கள் ஃபத்வாக்கள் கொடுத்துள்ளார்கள்.
“நிக்காஹ்” என்னும் திருமண ஒப்பந்தம் முடியும் வரை ஒருவருக்கு பேசி வைத்திருக்கும் இணை என்பது அன்னியர் என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு. மூன்றாவது ஒரு ஆள் இல்லாமல் பேசினால் அங்கே இருவருடன் மூன்றாவதாக ஷைத்தான் இருப்பான் என்பது தெள்ளத் தெளிவான ஹதீஸ்.
இவற்றையெல்லாம் மீறி நமது சமுதாயத்தில் எத்தனையோ பேர் தங்களுக்கு பேசி வைத்திருக்கும் இணைகளிடம் மணிக்கணக்கில் போனில் பேசுகிறார்கள்.
(இப்படி மணிக்கணக்கில் அளவுக்கு மீறி பேசி நிச்சயிக்கப்பட்ட இணைகள் முறிந்ததும் உண்டு).இப்படிப் பேசும்பொழுது அவர்கள் கூட முழுவதுமாக ஷைத்தான் இருக்கின்றான். பின் அந்த உரையாடல்களில் எப்படி பரக்கத் இருக்கும்? இப்படிப்பட்டவர்களின் உறவுகள் ஷைத்தானியத்துடன் தொடங்கும்பொழுது அவர்களது மண வாழ்க்கையில் எங்கே அமைதி நிலவும்? எங்கே நிம்மதி தவழும்? சந்தேகங்களும், சறுக்குகளும் மணவாழ்க்கையின் துவக்கத்திலேயே துவங்கிவிடும்.இதில் மனவருத்தத்திலும் மனவருத்தம் என்னவெனில் இத்தகைய பெண்களைக் கண்டித்து, கல்லூரிகளிலிருந்து உடனே நீக்கி, வீட்டுக்கு அழைத்து வராமல், தன் மகள் விரும்பிய ஆடவனையே மாப்பிள்ளை பேசச் செல்லும் தாய்மார்களும் உண்டு. இதனை யாரிடம் போய்ச் சொல்வது? எங்கே போய் முட்டிக் கொள்வது?
இப்படி தாய்மார்கள் தங்கள் பிள்ளைகள் மார்க்கத்திற்கு முரணாக நடந்துகொள்வதற்கு துணை போகிறார்கள் என்றால் பிரச்னை மகளிடமிருந்து துவங்கவில்லை. தாயிடமிருந்து துவங்கிறது.
தாய்க்கு மார்க்கப் பற்று இல்லை. மார்க்க ஞானம் இல்லை. எத்தனை சேனல்களில் இன்று மார்க்க சொற்பொழிவுகள் ஒளிபரப்பபடுகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் பார்ப்பதற்கு இவர்களுக்கு மனம் வருவதில்லை.வக்த் தவறாமல் வணங்குகிறார்களோ இல்லையோ, வரும் சீரியல்களைப் பார்த்து விடுகிறார்கள்.
சினிமாக்களை தன் மக்களுடன் விடாமல் பார்க்கும் தாய்மார்களும் உண்டு.புனிதமிக்க நமது சமுதாயம் இப்பொழுது எங்கே சென்று கொண்டிருக்கிறது? முன்போ அங்கொன்றும் இங்கொன்றுமாக கேள்விப்பட்ட சம்பவங்கள் இன்று நல்ல மார்க்கப் பின்னணி கொண்ட குடும்பங்களில் கேட்கின்றனவே!
அந்தத் குடும்பங்களிலெல்லாம் மார்க்கம் எடுபட்டுப் போய்விட்டதா?
அன்னியக் கலாச்சாரங்களுக்குள் அமுங்கிபோய் விட்டோமா?
கால ஓட்டத்தில் கரைந்து விட்டோமா?
இதயங்களில் இடி விழும் இப்படிப்பட்ட இகழ்வுகள் இனியாவது நடக்காதிருக்குமா?
நம் இளைய சமுதாயம் இஸ்லாத்தின் பிடிக்குள் இனியாவது தலையெடுக்குமா?
இந்தச் சீரழிவுகளுக்கெல்லாம் தீர்வுதான் என்ன?
தீர்வு ஒன்றே ஒன்றுதான். அதுதான் தக்வா என்ற இறையச்சம்!தாய்ப்பாலை ஊட்டும்பொழுதே தக்வாவையும் சேர்த்து ஊட்ட ஆரம்பித்து விட்டால் இந்த இழிநிலைகளை தவிர்க்கலாம்.இன்று அவர்களிடம் நீங்கள் செல்போனைத் தடை செய்தால் நாளை வேறு ஒரு நவீன கருவியை கையில் வைத்திருப்பார்கள். அது இதைவிட மோசமாக இருக்கலாம்.
ஆனால் தக்வா என்னும் இறைத் தடையை ஏற்படுத்தி விட்டால் எப்பேற்பட்ட நவீன கருவிகள் வந்தாலும் அவை அவர்களை ஒன்றும் செய்ய முடியாது.ஆண் குழந்தைகளுக்கு எப்படி மார்க்கக் கல்வி கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளனவோ அதே போன்று பெண் குழந்தைகளுக்கும் மார்க்கக் கல்வி கிடைக்கும் வாய்ப்புகளை அதிகப்படுத்த வேண்டும்.
ஆக, இஸ்லாத்தை இதயங்களில் ஏற்றினால் ஏற்றம் பெறுவது இம்மையில் மட்டுமல்ல; மறுமையிலும்தான்!
விபச்சாரிகளையும், விபச்சாரனையும் தன் பிள்ளைகளுடன் இருந்து பார்க்கும் ரோசம் கெட்ட பெற்றோர்கள்
Latest Jumuahs
Ash Sheikh Agar Mohamed(Naleemi)
Colombo 03, Kollupitty Jumua Masjith
Ash Sheikh Murshid Mulaffar(Humaidi)
Colombo 06,Kirulapana, Thaqwa Jumua Masjith
Ash Sheikh Ashiq Abul Hasan(Rashadi)
Wellampitiya, Kohilawatte, Al Ibrahimiya Jumua Masjidh
Ash Sheikh Abdull Kaathar(Malahiri)
Panadura, Pallimulla Jumua Masjith
Ash Sheikh Abdull Khaliq(Deobandi)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
Ash Sheikh Abdullah(Usmani)
Colombo15, Zaviya Lane, Zaviyathul Khairiya Jumua Masjidh
Ash Sheikh Abdur Rahman Hafiz(Malahiri)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
Ash Sheikh Nibras(Haqqani)
Colombo 12, Aluthkade, Muhiyadeen Jumua Masjidh
Ash Sheikh Umar(Innami)
Colombo 12, Aluthkade, Muhiyadeen Jumua Masjidh
Ash Sheikh Ashiq Abul Hasan(Rashadi)
Colombo 15, Mattakuliya, Mutwal Jumua Masjidh
Ash Sheikh Abdull Khaliq(Deobandi)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
Ash Sheikh Abdur Rahman Hafiz(Malahiri)
Colombo 03, Kollupitty Jumua Masjith
Ash Sheikh Ihsan Mubeen(Humaidi)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
Ash Sheikh Abdull Haleem(Sarqi)
Weligama,Buhari Jumua Masjith
Ash Sheikh Saeed Ramalan(Rahmani)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
Latest Special Bayans
Ash Sheikh Nibras(Haqqani)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
Ash Sheikh Nibras(Haqqani)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
Ash Sheikh Nibras(Haqqani)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
Ash Sheikh Nibras(Haqqani)
Colombo 09, Dematagoda Place, Ganeemathul Qasimiya Jumua Masjidh
Ash Sheikh Hithayathullah Razeen(Rahmani)
Colombo 12, Aluthkade, Muhiyadeen Jumua Masjidh
Ash Sheikh Nibras(Haqqani)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
Ash Sheikh Nibras(Haqqani)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
Ash Sheikh Hithayathullah Razeen(Rahmani)
Kurunegala, Mallawapitiya, Masjidhul Hasanath

Your Comments