அன்னை ஆயிஷா (ரலி-அன்ஹா) அறிவிக்கிறார்கள்:
ஒருநாள் என் தந்தை அபூபக்கர் (ரலி) என்னிடம் வந்து வினவினார்கள்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்குக் கற்றுத் தந்த ஒரு அருமையான துஆவை நீ நபியிடமிருந்து கேட்டிருக்கிறாயா?
“என்ன அது?”
"அந்த துஆவை நபி ஈஸா (அலைஹிஸ் ஸலாம்) அவர்கள் தன் சீடர்களுக்குக் கற்றுக் கொடுத்து அவர்களுக்குக் கூறினார்கள்: சீடர்களே! உங்களில் ஒருவருக்கு ஒரு தங்க மலையளவுக்குக் கடன் இருந்தாலும் இந்த துஆவின் மூலம் அல்லாஹ் அதை நிறைவேற்றிடுவான்:
اللَّهُمَّ فَارِجَ الْهَمِّ، كَاشِفَ الْغَمِّ، مُجِيبَ دَعْوَةِ الْمُضْطَرِّينَ، رَحْمَانَ الدُّنْيَا وَالْآخِرَةِ وَرَحِيمَهُمَا، أَنْتَ تَرْحَمُنِي، فَارْحَمْنِي بِرَحْمَةٍ تُغْنِينِي بِهَا عَنْ رَحْمَةِ مَنْ سِوَاكَ .
அபூபக்கர் (ரலி) கூறுகிறார்கள்: எனக்குக் கொஞ்சம் கடன் இருந்தது. அதை நான் விரும்பவில்லை. ஆகவே இந்த துஆவை நான் ஓதினேன். அதன் மூலம் அல்லாஹ் அக்கடனை நிறைவேற்றினான்.
ஆயிஷா (ரலி-அன்ஹா) கூறுகிறார்கள்:
அஸ்மா பின்த் உமைஸ் (ரலி-அன்ஹா) அவர்களுக்கு ஒரு தீனாரும் மூன்று திர்ஹமும் நான் கொடுக்கவேண்டி இருந்தது. அவர்கள் என்னைக் காண அடிக்கடி வருவார்கள். ஆனால் நான்தான் அவர்களைக் காண வெட்கமாக இருந்தது. ஏனெனில் அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த என்னிடம் வழி இல்லாமல் இருந்தது.
எனவே இந்த துஆவை நான் ஓத ஆரம்பித்தேன்.
என்ன ஆச்சரியம்! சிறிது அவகாசத்திற்குள் எனக்கு அல்லாஹ் ஒரு இரணம் தந்தான். அது சதகா (தானம்) அல்ல. வாரிசுச் சொத்தும் அல்ல. எதிர்பாராவிதமாக இறைவன் எனக்கு ஈந்தது.
ஆனால் அந்தப் பொருள் மூலம்,
என் கடனையும் அடைத்தேன்;
என் குடும்பத்தினருக்கு நல்ல தொகையும் தந்தேன்;
அப்துர்ரஹ்மான் அவர்களின் மகளுக்கு ஒரு நல்ல நகையும் வாங்கி அணிவித்தேன்;
அதற்குப் பிறகும் சிறிது பொருள் மீதமிருந்தது.
எனவே அன்பர்களே! இந்த துஆவை அனுதினமும் ஓதி அளவிலா ஆனந்தம் அடைவோமாக!
Latest Jumuahs
Ash Sheikh Mafaz Mufthi(Yoosufi)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
Ash Sheikh Ashiq Abul Hasan(Rashadi)
Wellampittiya, Sedhawatte, Ar Rahmath Jumua Masjidh
Ash Sheikh Muzzammil(Rashadi)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
Ash Sheikh Anfas Mufthi(Deobandi)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
Ash Sheikh Abdull Khaliq(Deobandi)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
Ash Sheikh M.I.M Rizwe Mufthi(Binnoori)
Colombo 03, Kollupitty Jumua Masjith
Ash Sheikh M.I.M Rizwe Mufthi(Binnoori)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
Ash Sheikh Shakeel(Islami)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
Ash Sheikh Murshid Mulaffar(Humaidi)
Colombo 12, Aluthkade, Muhiyadeen Jumua Masjidh
Ash Sheikh Fayas(Furqani Kekirawa)
Kurunegala, Mallawapitiya Jumua Masjidh
Latest Special Bayans
Ash Sheikh Nibras(Haqqani)
Colombo 09, Dematagoda Place, Ganeemathul Qasimiya Jumua Masjidh
Ash Sheikh Hithayathullah Razeen(Rahmani)
Colombo 12, Aluthkade, Muhiyadeen Jumua Masjidh
Ash Sheikh Nibras(Haqqani)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
Ash Sheikh Nibras(Haqqani)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
Ash Sheikh Hithayathullah Razeen(Rahmani)
Kurunegala, Mallawapitiya, Masjidhul Hasanath
Your Comments