(அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவின் பத்வா)
ஒரு பெண், குறித்த ஓர் ஆண் தன்னுடன் பலமுறை தவறான முறையில் உறவு கொண்டதாக ஏற்றுக் கொண்டதாகவும், எனினும் அந்நபர் அதனை மறுப்பதாகவும் கூறி, அவர்களுக்குத் தண்டனை வழங்குவது பற்றிய மார்க்கத் தீர்ப்பைக் கோரி தங்களது நிர்வாக சபையினால் 2003.10.13 திகதியிடப்பட்டு எமக்கு அனுப்பப்பட்ட கடிதம் இத்தால் தொடர்புகொள்ளப்படுகின்றது.
மேற்படி விடயம் சம்பந்தமான சன்மார்க்கத் தீர்ப்பு பின்வருமாறு:
எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், சலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
விபச்சாரம் புரிவது இஸ்லாத்தில் வண்மையாகக் கண்டிக்கப்பட்டு, முற்றிலும் தடுக்கப்பட்ட பெரும் பாவங்களில் ஒன்றாகும். இப்பாவச் செயலுக்கு கடும் தண்டணையை விதித்துள்ள இஸ்லாம், ஆண், பெண் இரு பாலாருக்குமான நடை, உடை சம்பந்தப்பட்ட ஒழுக்க வரம்புகளைத் தெளிவுபடுத்தி, இப்பாவத்தளவில் இட்டுச் செல்லும் சகல வழிகளையும் தடுத்துள்ளதையும் காணலாம்.
ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அல்லது தகுதிவாய்ந்த நான்கு சாட்சிகள் மூலம் அவர் விபச்சாரத்தில் ஈடுபட்டது முறையாக நிரூபணமாகும் பட்சத்தில் மாத்திரமே அவருக்கான தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். எனவே, ஒருவர் குறித்த ஒருவருடன் தவறான உறவில் ஈடுபட்டதாக ஏற்றுக்கொள்ள, அந்நபர் அதனை மறுப்பாராயின் முதலாமவருக்கு மாத்திரமே விபச்சாரத்திற்கான தண்டனை வழங்கப்பட வேண்டும். பின்வரும் இரு ஹதீஸ்கள் மூலம் இதனை நாம் விளங்கிக் கொள்ளலாம்:
• சஹ்ல் இப்னு சஃத் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
‘ஒரு மனிதர் (நபியவர்களிடம் வந்து) தான் (குறித்த) ஒரு பெண்ணுடன் விபச்சாரம் புரிந்ததாக ஏற்றுக்கொண்டார். எனவே, நபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் ஒருவரை குறித்த அப்பெண்ணிடம் அனுப்பினார்கள். அப்பெண் (தான் விபச்சாரம் பரியவில்லையென) மறுக்கவே, அம்மனிதருக்கு நபியர்கள் தண்டணையை நிறைவேற்றினார்கள்.’ (அல்-பைஹகீ, ஹதீஸ் இல.: 17002)
• அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
‘நான் அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் சமுகத்தில் இருந்தபோது ஒருவர் எழுந்து (ஒரு நபரைச் சுட்டிக்காட்டி) நிச்சயமாக எனது மகன் இவரிடம் கூலிக்காக வேலை செய்து வந்தார். (அப்போது) இவரது மனைவியுடன் எனது மகன் விபச்சாரம் புரிந்துள்ளார் எனக் கூறினார். அதற்கு நபியவர்கள் ‘உமது மகனுக்கு நூறு கசையடிகளும், ஒரு வருடம் நாடு கடத்தப்படுவதும் தண்டனையாகும்’ எனக் கூறிவிட்டு, (தன் தோழர் ஒருவரை நோக்கி) உனைசே! இவரது மனைவியிடம் (விசாரிப்பதற்காக) நீர் சென்று, அப்பெண் அதை ஏற்றுக்கொண்டால்,அவளுக்குக் கற்களால் அடித்துக் கொல்லும் தண்டனையை நிறைவேற்றும் என்று கூறினார்கள்.(முஸ்லிம், ஹதீஸ் இல.: 1697)
விபச்சாரம் புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் அதனை ஏற்றுக்கொள்ளாத வரை முறையான சாட்சியங்கள் இல்லாத நிலையில் அவருக்குத் தண்டனை வழங்க முடியாது என்பது மேற்படி ஹதீஸ்கள் மூலம் தெளிவாகிறது.
ஆகவே, எமக்கு முன்வைக்கப்பட்ட மேற்படி விடயத்தில் குறித்த அப்பெண்ணுக்கு மட்டுமே விபச்சாரத்திற்கான தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். அத்துடன் ஒருவர் பல முறை விபச்சாரம் புரிந்த பின் அவரது குற்றம் நிரூபணமானால் அவை அனைத்திற்குமாக ஒரு முறை மாத்திரமே தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்.
அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.
ஒரு பெண், குறித்த ஓர் ஆண் தன்னுடன் விபச்சாரம் புரிந்ததாக ஏற்றுக் கொள்ள, அந்நபர் அதனை மறுக்கும் பட்சத்தில் தண்டனை வழங்குவது சம்பந்தமான மார்க்கத் தீர்ப்பு
Latest Jumuahs
Ash Sheikh Hithayathullah Razeen(Rahmani)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
Ash Sheikh Yoosuf Mufthi(Binnoori)
Colombo 12, Aluthkade, Muhiyadeen Jumua Masjidh
Ash Sheikh Abdus Saththar(Hashimi)
Colombo 03, Kollupitty Jumua Masjith
Ash Sheikh M.I.M Rizwe Mufthi(Binnoori)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
Ash Sheikh Abdur Rahman Hafiz(Malahiri)
Colombo 03, Kollupitty Jumua Masjith
Ash Sheikh Akram(Madhani)
Dehiwela, Kawdana Road Jumua Masjidh
Ash Sheikh Abdull Haleem(Sarqi)
Colombo 04, Majma Ul Khairah Jumua Masjith (Nimal Road)
Ash Sheikh Ashiq Abul Hasan(Rashadi)
Panadura, Pallimulla Rawulathul Asfiya Jumuah Masjith
Ash Sheikh Ashiq Abul Hasan(Rashadi)
Avissawella, Talduwa Grand Jumuah Masjith
Ash Sheikh Ashiq Abul Hasan(Rashadi)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
Ash Sheikh Agar Mohamed(Naleemi)
Colombo 03, Kollupitty Jumua Masjith
Ash Sheikh Murshid Mulaffar(Humaidi)
Colombo 06,Kirulapana, Thaqwa Jumua Masjith
Latest Special Bayans
Ash Sheikh Abdull Azeez(Khiliri)
Wellampitiya, Megoda Kolonnawa, Nooraniya Jumua Masjidh
Ash Sheikh M.H.M.Yahya(Falahi)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
Ash Sheikh Arkam Noor Amith(Darool Uloom)
Panadura, Pallimulla Jumua Masjith
Ash Sheikh Nibras(Haqqani)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
Ash Sheikh Nibras(Haqqani)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
Ash Sheikh Nibras(Haqqani)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
Ash Sheikh Nibras(Haqqani)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
Ash Sheikh Nibras(Haqqani)
Colombo 09, Dematagoda Place, Ganeemathul Qasimiya Jumua Masjidh
Ash Sheikh Hithayathullah Razeen(Rahmani)
Colombo 12, Aluthkade, Muhiyadeen Jumua Masjidh
Ash Sheikh Nibras(Haqqani)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
Ash Sheikh Nibras(Haqqani)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith

Your Comments